Posts

களிப்பொருபது - சைவசாரியாரின் ஒட்டக்கூத்தரை பற்றிய வரிகள்

"வாழிஒட்டக் கூத்தன்! வகைவந்தார் தாம்வாழி! வாழிமன்னன் எந்நாளும்! வையகத்தில் - வாழி கொலைகளவு கள்காமம் கோன்விலகி மாக்கள் உலைவில்லா இன்பத் துகந்து".  [இ.ன்]                     (ஈட்டி எழுபது, எழுப்பெழுபது என்னும் சிறந்த நூல்களைப் பாடிய) கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் என் றும் வாழ்வாராக! அக்கூத்தர் மரபில் தேன்றியவர்கள் வழ்வார்களாக! உலகை ஆளுகின்ற அரசன் என்றும் வாழ்வானாக! இவ்வுலகில் வாழும் மக்கள் கொலைசெய்தல், களவாடல் கள்ளுண்டல், காமங் கொள்ளல் முதலிய குற்றங்களில் இருந்து விலகி, நிறைவான இன்பத்தை அடைந்து எந்நாளும் வாழ்வாராக!

களிப்பொருபது - ஒட்டக்கூத்தர் பற்றிய அஞ்சனாட்சியின் வரிகள்

"வாழிசக்ர வர்த்திதன்பேர் வாய்ந்தஒட்டக் கூதன்பர் ஏழினொடும் ஏழுமதன் மேலுநிலை - சூழச்செய் ஈட்டி எழுபதெனும் இந்நூ ற்கொப் பின்மைகண்டீர் நட்டிலுயர் வாணர்களே நன்கு". [இ.ன்]                         நாட்டில் வாழும் உயர்ந்தோர்களே, ஏழுடன் ஏழு என்று சொல்லப்படுகின்ற பதினான்கு உலகங்களிலும், அதற்கு அப்பாலும் நிலைப்பெற்றுப் புகழை பரப்புகின்ற ஈட்டி எழுபது என்னும் இந்த நூலுக்கு வேறு எந்த நூலும் ஒப்பில்லை எனபதை நன்கு  உணர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு புகழ் உடைய இந்த நூலை இயற்றிய கவிச் சக்கரவர்த்தி என்னும் பட்டப்பெயர் பெற்ற , ஒட்டக்கூத்த நெடுநாள் நிலைத்து வாழ்வாராக!

களிப்பொருபது - செங்குந்தனைப் பற்றி சேரன் எழுதிய கவி

"விண்கண்ட தேவரெல்லாம் வீற்றிருந்தார் ஈங்கென்று கண்கண்ட மாமுனிவர் கட்டினார் - பண்கொண்ட கூத்தன் கவிக்குக் குவிந்ததலை ஆசனத்தைப் பார்த்திடவேனன்ராய்ப் பதிந்து". [இ.ன்]                 புகழுடைய ஒட்டக்கூத்தர் தங்கள்  மரபினர்மீது உயர்ந்த இசையோடு கூடிய கவிபாட வேண்டும் என்பதர்காக, வெட்டிக் குவிக்கப்பட்ட தலைகளினால் அமைக்கப்பட்ட சிரச்சிங்காதனத்தின் அழகைக் காண்பதற்காக விண்ணுலகத்தில் உள்ள தேவர்களெல்லாம் இங்கே நன்றாகப் பொருந்தி அமர்ந்திருந்தைப்  பாருங்கள் என்று தங்கள் கண்களால் கண்டு மகிழ்ந்த சிறப்புடைய முனிவர்கள் ஏனையோர்க்கு விளங்கக் காட்டினார்கள்.

களிப்பொருபது - அம்பிகாபதி எழுதிய செங்குந்தரின் பெருமை

" குந்தர் பெருமிதத்தைக் கூறுவதென் பார்த்திபர்கான்  சந்தத் தமிழ்க்கடலார் தாம்போற்ற - விந்தைத்  தலைதந்தார் பாடலுக்குத் தாமென்றும் பூவில் கலைதந்தார் மக்களுக்குக் காண்". [இ.ன்]                 சந்தப்பாடல்கள் என்னும் தமிழ்க்கடலுக்கு உரியவர்களான கவிபாடுவதில் வல்ல புலவர்கள் மகிழ்ந்து போற்றுமாறு, ஈட்டி எழுபது  என்னும் நூலைப் பெற, இதுவரை இல்லாத புதுமையாகத் தம் தலைகளையே செங்குந்தர்கள் அரிந்து கொடுத்தார்கள். அதுப்போன்றே பூமியில் உயர்ந்த மானத்தைக் காப்பதர்கு மக்களுக்கு ஆடை நெய்து கொடுத்தார்கள். மன்னர்களே, இப்படிப்பட்ட சிறப்பினை உடைய செங்குந்தர்களின் பெருமைகளை, எப்படி அளவிட்டுக் கூறுவது!

களிப்பொருபது - ஒட்டக்கூத்தரைப் பற்றிய பாண்டியனின் கூற்று

"அன்றும் கவிநலத்தை ஆய்ந்தறிந்தேன் பாண்டியிலே இன்றும் கவிநலத்தை ஈங்கறிந்தேன் - என்றும்தான் கூத்தற் கெதிருண்டோ கூறும் அவனிதனி பார்த்திபர்ற் காண்மின் படித்து" [இ.ன்]                 பாண்டிய நாட்டில் பல சந்தர்ப்பங்களில் பல புலவர்கள் பாடிய கவிகளை அவர்கள் பாடியப்போது. ஆராய்ந்து அக்கவிகளின் சிறப்பினை அன்று உணர்ந்தேன். இன்று சோழ நாட்டில் பாடப்பட்ட ஒட்டக்கூத்தருடைய நூலின்  மூலம் அச்சிறப்பினை அறிந்தேன். இந்த உலகத்தில் கவிபாடுவதர்கு ஒட்டக்கூத்தருக்கு இணையான புலவர் ஒருவரும் இல்லை என்பதை, அரசர்களே! நீவீர் படித்து உணர்ந்துகொள்ளுங்கள்!

களிப்பொருபது - ஒட்டக்கூத்தரைப் பற்றி சோழனின் சொல்

"ஏதென் றெடுத்துரைக்கேன் என்னாசான் தங்கவியைப்  போதுள் இருந்துவளர் பொன்மாதே - ஈதலவா  சாகாத கல்வியென்று சன்றோர்கள் சாற்றிவைத்த  ஏகாந்தச் சொல்லாகும் எண்". [இ.ன்]              செந்தாமரை மலரில் இருந்து வாழும் திருமளே என் குருநாதராகிய ஒட்டக்கூத்தர் அருளிய நூலின் சிறப்பை நான் என்ன என்று எடுத்துச் சொல்லுவேன்! சான்றோர்களாய் உள்ளோர், 'இக்து அன்றோ உலகில் என்றும் அழியாத புகழுடன் நிலைது நிற்கும் நூல்' என்று சொல்லி வைத்த ஒரு தனிப்புகழுடைய நூல் அது என்று அறிவாயாக.

செங்குந்தர்களை பற்றி புகழேந்தி புலவர் வியந்து எழுதிய பாடல்

 "விண்முகத்தோர் பூமாரி வீசியதும் ஓர்வியப்பொ மண்முகத்தே செங்குந்தர் மாய்சிரங்கள் - எண்முகத்தும் சிந்தியதத் த்ம்முடலைச் சேர்ந்தொட்டிக் கொண்டொலித்து வந்தவிதம் எண்ணவருன் கால்". [இ.ன்]               இந்த மண்ணுலகத்தில் செங்குந்தத் தலைவர்கள் சிரச்சிங்காதனம் அமைக்க அரித்து வீசிய தலைகள் எட்டுத்திசைகளிலும் சிதறிக் கிடந்த தங்கள் தங்கள் உடல்களோடு சேர்ந்து பொருந்தி உயிர்பெற்று மீண்டும் பேரொலியோடு வந்த தன்மையை எண்ணும் போது உண்டான வியப்பே பெருவியப்பு. அதைக்கண்டு தேவலோகத்தில் இருந்தவர்கள் மலர்மழை பெய்து அதற்கு ஈடான ஒரு வியப்ப்புக்குரிய செயலாகுமா!