களிப்பொருபது - ஒட்டக்கூத்தரைப் பற்றி சோழனின் சொல்
"ஏதென் றெடுத்துரைக்கேன் என்னாசான் தங்கவியைப்
போதுள் இருந்துவளர் பொன்மாதே - ஈதலவா
சாகாத கல்வியென்று சன்றோர்கள் சாற்றிவைத்த
ஏகாந்தச் சொல்லாகும் எண்".
[இ.ன்]
செந்தாமரை மலரில் இருந்து வாழும் திருமளே என் குருநாதராகிய ஒட்டக்கூத்தர் அருளிய நூலின் சிறப்பை நான் என்ன என்று எடுத்துச் சொல்லுவேன்! சான்றோர்களாய் உள்ளோர், 'இக்து அன்றோ உலகில் என்றும் அழியாத புகழுடன் நிலைது நிற்கும் நூல்' என்று சொல்லி வைத்த ஒரு தனிப்புகழுடைய நூல் அது என்று அறிவாயாக.
Comments
Post a Comment