அசரீரியின் செங்குந்தரின் உருவகம்




         " இந்தக் கைக் கோளர்  இசைக்கெண் கணன் படைத்த
          எந்தக் கைக் கோளர் இணை ஆவாரே - அந்திப்                                                            பிறையணிகைக் கொளனுருப் பெற்றவன்பால் வைகும்      
          நிறையணிகைக் கோளரே நேர்".

இதன் பொருள்: 


ஒட்டக்கூத்தர் இருந்து பிரபந்தம் பாடுவதற்குத் தங்கள் தலைகளை வெட்டிக்கொடுத்து, பின்பு அவரால் எழுப்பப் பட்ட இந்த கைக்கோளர் எனப்படும் செங்குந்தருடைய புகழுக்கு எட்டுக் கண்களை உடைய பிரம்மதேவனால் படைக்கப் பட்ட எந்த செயலைக் கொண்டவர் புகழும் இணை ஆக மாட்டா அந்தியில் தோன்றும் பிறைச்சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமானது உருவத்தை பெற்று அவனருகில் இருக்கும் நிறைந்த அழகுடைய உருத்திரரே இவர்கட்குப் புகழால் இணையாவார்கள். பிறர் ஒருவரும் இணையாகார் என்பதாம்.


[உருப் பெற்றவர் என்பது, சாரூப, சாலோக, சாமீப, சாயுச்சியம் என்னும் நான்கு நிலைகளில் சிவ சாரூபம் பெற்றவர்களை.]



Comments

Popular posts from this blog

களிப்பொருபது - அம்பிகாபதி எழுதிய செங்குந்தரின் பெருமை

களிப்பொருபது - ஒட்டக்கூத்தர் பற்றிய அஞ்சனாட்சியின் வரிகள்