செங்குந்தர்களை பற்றி கம்பர் எழுதியது
"கந்தழியென்(று) ஆன்றோர்கள் கண்டு நிதம்பரவும்
எந்தை முருகன் இளையவராம் - சந்ததியில்
வந்துமகிழ் செங்குந்தர் வாய்மைதைனை என்சொல்கேன்
செந்திருமால் செல்வர்களெ தேர்ந்து".
[இ.ன்] திருமாலால் புரக்கப்படும் செல்வக்குடியில் தோன்றியவர்களே! ஆன்றோர்கள் 'கந்தழி' எனச் சொல்லிப் புகழும் கடவுள் கந்தனாகிய இவனே என்று அறிவுடையவர்கள் நாள் தோறும் கண்டு வணங்கித் துதிக்கின்ற, எம் தந்தையாகிய முருகப் பெருமானுக்கு இளையவராகிய வீரவாகுதேவர் முதலிய நவவீரர்களுடைய மரபில் வந்து தோன்றி மகிழ்ந்து, திருச்செங்குந்தப் படையைக் கையில் தரித்த செங்குந்தர்களுடைய, சொல் மாறுபடாத தன்மையினை ஆராய்ந்து, என்னவின்று சொல்லிப் புகழ்வேன்!
[தொல்காப்பியர் 'கந்தழி' எனக்கூறியது கந்தனைத்தான் என்பது இதில் உள்ள நயம்.]
Comments
Post a Comment