களிப்பொருபது - செங்குந்தனைப் பற்றி சேரன் எழுதிய கவி



"விண்கண்ட தேவரெல்லாம் வீற்றிருந்தார் ஈங்கென்று
கண்கண்ட மாமுனிவர் கட்டினார் - பண்கொண்ட
கூத்தன் கவிக்குக் குவிந்ததலை ஆசனத்தைப்
பார்த்திடவேனன்ராய்ப் பதிந்து".


[இ.ன்]


                புகழுடைய ஒட்டக்கூத்தர் தங்கள்  மரபினர்மீது உயர்ந்த இசையோடு கூடிய கவிபாட வேண்டும் என்பதர்காக, வெட்டிக் குவிக்கப்பட்ட தலைகளினால் அமைக்கப்பட்ட சிரச்சிங்காதனத்தின் அழகைக் காண்பதற்காக விண்ணுலகத்தில் உள்ள தேவர்களெல்லாம் இங்கே நன்றாகப் பொருந்தி அமர்ந்திருந்தைப்  பாருங்கள் என்று தங்கள் கண்களால் கண்டு மகிழ்ந்த சிறப்புடைய முனிவர்கள் ஏனையோர்க்கு விளங்கக் காட்டினார்கள்.

Comments

Popular posts from this blog

களிப்பொருபது - சைவசாரியாரின் ஒட்டக்கூத்தரை பற்றிய வரிகள்

களிப்பொருபது - ஒட்டக்கூத்தரைப் பற்றி சோழனின் சொல்

களிப்பொருபது - ஒட்டக்கூத்தரைப் பற்றிய பாண்டியனின் கூற்று