களிப்பொருபது - சைவசாரியாரின் ஒட்டக்கூத்தரை பற்றிய வரிகள்
"வாழிஒட்டக் கூத்தன்! வகைவந்தார் தாம்வாழி!
வாழிமன்னன் எந்நாளும்! வையகத்தில் - வாழி
கொலைகளவு கள்காமம் கோன்விலகி மாக்கள்
உலைவில்லா இன்பத் துகந்து".
[இ.ன்]
(ஈட்டி எழுபது, எழுப்பெழுபது என்னும் சிறந்த நூல்களைப் பாடிய) கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் என்
றும் வாழ்வாராக! அக்கூத்தர் மரபில் தேன்றியவர்கள் வழ்வார்களாக! உலகை ஆளுகின்ற அரசன் என்றும் வாழ்வானாக! இவ்வுலகில் வாழும் மக்கள் கொலைசெய்தல், களவாடல் கள்ளுண்டல், காமங் கொள்ளல் முதலிய குற்றங்களில் இருந்து விலகி, நிறைவான இன்பத்தை அடைந்து எந்நாளும் வாழ்வாராக!
Comments
Post a Comment