களிப்பொருபது - ஒட்டக்கூத்தர் பற்றிய அஞ்சனாட்சியின் வரிகள்
"வாழிசக்ர வர்த்திதன்பேர் வாய்ந்தஒட்டக் கூதன்பர்
ஏழினொடும் ஏழுமதன் மேலுநிலை - சூழச்செய்
ஈட்டி எழுபதெனும் இந்நூ ற்கொப் பின்மைகண்டீர்
நட்டிலுயர் வாணர்களே நன்கு".
[இ.ன்]
நாட்டில் வாழும் உயர்ந்தோர்களே, ஏழுடன் ஏழு என்று சொல்லப்படுகின்ற பதினான்கு உலகங்களிலும், அதற்கு அப்பாலும் நிலைப்பெற்றுப் புகழை பரப்புகின்ற ஈட்டி எழுபது என்னும் இந்த நூலுக்கு வேறு எந்த நூலும் ஒப்பில்லை எனபதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு புகழ் உடைய இந்த நூலை இயற்றிய கவிச் சக்கரவர்த்தி என்னும் பட்டப்பெயர் பெற்ற , ஒட்டக்கூத்த நெடுநாள் நிலைத்து வாழ்வாராக!
Comments
Post a Comment