களிப்பொருபது - ஒட்டக்கூத்தரைப் பற்றிய பாண்டியனின் கூற்று
"அன்றும் கவிநலத்தை ஆய்ந்தறிந்தேன் பாண்டியிலே
இன்றும் கவிநலத்தை ஈங்கறிந்தேன் - என்றும்தான்
கூத்தற் கெதிருண்டோ கூறும் அவனிதனி
பார்த்திபர்ற் காண்மின் படித்து"
[இ.ன்]
பாண்டிய நாட்டில் பல சந்தர்ப்பங்களில் பல புலவர்கள் பாடிய கவிகளை அவர்கள் பாடியப்போது. ஆராய்ந்து அக்கவிகளின் சிறப்பினை அன்று உணர்ந்தேன். இன்று சோழ நாட்டில் பாடப்பட்ட ஒட்டக்கூத்தருடைய நூலின் மூலம் அச்சிறப்பினை அறிந்தேன். இந்த உலகத்தில் கவிபாடுவதர்கு ஒட்டக்கூத்தருக்கு இணையான புலவர் ஒருவரும் இல்லை என்பதை, அரசர்களே! நீவீர் படித்து உணர்ந்துகொள்ளுங்கள்!
Comments
Post a Comment