செங்குந்தர்களின் வீரத்தை பற்றி ஔவையார் எழுதியது



" மூவலகை யுங்கடந்து மூதண்டப் பித்திகையை
மேவி அதற் கப்பாலும் மின்னியதெ - பூவிலென்றும்
மங்காத நூல்வேண்டி மாண்கூத்தற் கிட்டசிரச்
சிங்கா தனத்தலைவர் சீர்".


இதன் பொருள்:


                [இ.ன்] பூவுலகில் என்றும் மறையாமல் நிலைத்துநிற்கும் தன்மையுடைய ஒரு நூல் [ஈட்டி எழுபது] ஒட்டக்கூத்தரால் இயற்றித் தரப்படல் வேண்டும் என்பதற்காக பெருமையை உடைய அவருக்குச் சிரச்சிங்காதனம் இட்ட செங்குந்தத் தலைவர்களுடைய புகழ்ஒளி, மூன்று உலகங்களையும் கடந்து போய், அண்டங்களினுடைய மேல் முகட்டைப் பொருத்தி நின்று, அதற்கு அபாலும் போய்ப் பிரகாசித்தது



[பித்திகை - சுவர்; பூவில் - பூவுலகத்தில்; மாண் - பெருமை]


Comments

Popular posts from this blog

களிப்பொருபது - சைவசாரியாரின் ஒட்டக்கூத்தரை பற்றிய வரிகள்

களிப்பொருபது - ஒட்டக்கூத்தரைப் பற்றி சோழனின் சொல்

களிப்பொருபது - ஒட்டக்கூத்தரைப் பற்றிய பாண்டியனின் கூற்று